கால்பந்து உலக கோப்பை தகுதி சுற்றில் கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.
போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹங்கேரிக்கு எதிரான கால்பந்து உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் விளையாடினார்.
இந்தப் போட்டியில் இரண்டு கோல்கள் அடித்ததன் மூலம் ரொனால்டோ உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகளில் அதிக கோல்கள் அடித்தவராகச் சாதனை படைத்துள்ளார்.
இந்தப் போட்டியில் 66 சதவிகிதம் பந்தினை போர்ச்சுகல் அணியினரே தங்களது வசம் வைத்திருந்தனர்.
ரொனால்டோ சர்வதேச போட்டிகளில் 143 கோல்களும் மொத்தமாக 948 கோல்களையும் நிறைவு செய்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
இவரை தொடர்ந்து 39 கோல்கள் அடித்த கார்லோஸ் ரூயுஸ் இரண்டாம் இடத்திலும், 36 கோல்கள் அடித்து மூன்றாம் இடம் பிடித்து லியோனல் மெஸ்ஸியும் சாதனை படைத்துள்ளனர்.