ஈரோடு அருகே தீபாவளி வாரச் சீட்டு நடத்தி மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.
சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்த காந்தி என்பவர் தீபாவளி சீட்டு நடத்தி சுமார் இரண்டு கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.