இந்தோனேசியாவில் உள்ள லெவொடோபி லகி லகி எரிமலை சுமார் 10 கிலோ மீட்டர் உயரத்திற்கு வெடித்தது.
கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் புளோரஸ் தீவில் லெவொடோபி லகி லகி எரிமலை அமைந்துள்ளது.
இது சமீபகாலமாக அடிக்கடித்து வெடித்து வருகிறது. குறிப்பாக ஜூன் 18-ம் தேதியன்று வெடித்த எரிமலையால் அப்பகுதியில் சுமார் 32 ஆயிரத்து 800 அடி உயரத்துக்கு கரும்புகைகள் சூழ்ந்தது.
அதிலிருந்து நாட்டின் எரிமலை கண்காணிப்பு நிறுவனம் எச்சரிக்கை நிலையைத் தீவிரப்படுத்தியது.
இந்தச் சூழலில், மீண்டும் சுமார் 10 கிலோ மீட்டர் உயரத்திற்கு சாம்பல், கரும்புகைகளை வெளியேற்றி வெடித்தது.
எனவே, எரிமலையிலிருந்து 6 கிலோ மீட்டர் முதல் ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பகுதிகளுக்கு யாரும் செல்லக் கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.