கிட்னி திருட்டு புகாரில் மருத்துவமனை, அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
சட்டப்பேரவையில் கிட்னி முறைகேடு தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
அப்போது பேசிய அவர், கிட்னி முறைகேடு தொடர்பாக அரசு ஒரு குழுவை அமைத்ததாகவும், குழுவின் சோதனையின் அடிப்படையில், குறிப்பிட்ட மருத்துவமனையில் உடல் உறுப்பு சிகிச்சைக்கான முறையை அரசு ரத்து செய்துள்ளது எனவும் தெரிவித்தார்.
ஆனால், சம்பந்தப்பட்ட மருத்துவமனை மற்றும் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார்.
மேலும், ஏழை விசைத்தறியாளர்களின் வறுமையை பயன்படுத்தி கிட்னியை திருடியவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.