திருச்செந்தூரில் கொட்டி தீர்த்த கனமழையால் புகழ்பெற்ற சிவகொழுந்தீஸ்வரர் கோயிலில் வெள்ளம் சூழ்ந்து பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடியக் கனமழை கொட்டி தீர்த்தது.
கனமழை காரணமாகத் திருச்செந்தூரில் உள்ள புகழ்பெற்ற சிவகொழுந்தீஸ்வரர் கோயிலுக்குள் மழை நீர் புகுந்தது.
கோயில் முகப்பு பகுதியில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு முழங்கால் அளவு தண்ணீர் சூழ்ந்ததால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
கோயிலில் முழங்கால் அளவுக்குத் தேங்கியுள்ள நீரில் நடந்து சென்று பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சிவன் கோயிலுக்குள் செல்லக்கூடிய சாலைகள் மிகவும் தாழ்வான பகுதி என்பதால் அதிகளவு தேங்கியுள்ள மழை நீரில் வாகனங்கள் கடந்து சென்றன.
மேலும், சிவன் கோயிலுக்குள் புகுந்த மழை நீரை மின் மோட்டார்கள் மூலம் அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.