இட்லி கடை திரைப்படத்தைப் பாராட்டிய பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலைக்கு, நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் வெளியான இட்லி கடை படத்தைப் பார்த்த அண்ணாமலை, அவருக்குப் பாராட்டு தெரிவித்திருந்தார். வன்முறைக் காட்சிகள் இல்லாமல், குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை, மனநிறைவாகக் கண்டுகளிக்கும் படத்தை அளித்திருந்ததாகப் பாராட்டியிருந்தார்.
இதற்குப் படத்தின் நாயகன் தனுஷ், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள தனுஷ், படத்தைப் பார்க்க நேரம் ஒதுக்கியதற்கு மிக்க நன்றி எனத் தெரிவித்துள்ளார். மேலும் உங்களின் அன்பான வார்த்தைகள், பாராட்டு மற்றும் ஊக்கத்திற்கு நன்றியுடன் இருப்பதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.