கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் செந்தில் பாலாஜியை காப்பாற்றவே முதலமைச்சர் கரூருக்கு சென்றதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற சுற்றுப் பயணத்தில் பங்கேற்று பேசிய அவர், கள்ளக்குறிச்சிக்கு முதலமைச்சர் ஏன் செல்லவில்லை என கேள்வி எழுப்பினார்.
தமிழகம் எதில் வளர்ச்சியடைந்துள்ளது..? என்றும், போதைப்பொருள் புழக்கம், கொலை, கொள்ளை தமிழகத்தில் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
திமுக ஆட்சியில் 24 லாக்கப் மரணங்கள் நடைபெற்றுள்ளதாகவும், திமுக ஆட்சியை அகற்றுவதற்கான கவுன்ட்-டவுன் தொடங்கி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தூய்மை பணியாளர்களை, அமைச்சர் சேகர்பாபு மிரட்டியதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.