தருமபுரியில் சட்டவிரோத கல்குவாரி குறித்து தகவல் கொடுத்தவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தருமபுரி டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் தனது சகோதரி ஆனந்தி, மாமா ராஜேஷ் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை காரில் வந்த ஓமலூர் பகுதியைச் சேர்ந்த குவாரி உரிமையாளர் உத்திரசாமி மற்றும் சில போலீசார் ராஜேஷ் வீட்டிற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குவாரி குறித்து அதிகாரிகளுக்கு ராஜேஷ் தகவல் கொடுத்ததாகவும், ராஜேஷை கொலை செய்துவிடுவோம் என்றும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து மாரியப்பன் தர்மபுரி எஸ்.பியிடம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாரியப்பன் சட்டவிரோத குவாரி நடத்தி வரும் உத்தரசாமி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வழக்கு பதிவு எதும் செய்யாமல் தன்னிச்சையாக தங்கள் வீட்டுக்கு வந்த காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.