தீபாவளி பண்டிகை மற்றும் தங்கம் விலை உயர்வு ஆகியவற்றால் தமிழகத்தில் ஃபேன்ஸி மற்றும் கவரிங் நகைகளின் விற்பனை களைகட்டியுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் தங்கம் விலை அதிகரித்து வரும் நிலையில், ஒரு சவரன் 97ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக தங்கம் ஏழை எளிய மக்களுக்கு எட்டாக்கனியாக மாறி உள்ளது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெண்கள், தங்கள் ஆடைகளுக்கு ஏற்ற ஃபேன்ஸி மற்றும் கவரிங் நகைகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ஃபேன்ஸி மற்றும் கவரிங் நகை கடைகளில் நெக்லஸ், வளையல், பேன்சி கொலுசுகள் உள்ளிட்டவைகளை பெண்கள் ஷாப்பிங் செய்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், நகைக்கடையை விட பேன்சி ஸ்டோர்களில் பெண்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.