ஐப்பசி மாத பூஜைகளுக்காக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, தமிழ் மாதத்தின் முதல் தேதியில் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி ஐப்பசி மாத பூஜைகளுக்காக மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோயில் நடையை திறந்து தீபம் ஏற்றினார். பக்தர்கள் இன்று முதல் வரும் 20ம் தேதி வரை சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வருகையை ஒட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக 21 மற்றும் 22 தேதிகளில் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி இல்லையென கூறப்படுகிறது.
முன்னதாக கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஓர் ஆண்டு காலம் சபரிமலையில் தங்கி பூஜை செய்வதற்கான மேல் சாந்தி தேர்வு நாளை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.