தீபாவளிக்கு மறுநாளான அக்டோபர் 21-ம் தேதியை அரசு விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், ஆசிரியர்கள், அரசுஅலுவலர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் நலன் கருதி, அக்டோபர் 21-ம் தேதி பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அன்றைய தினம் விடுமுறை வழங்கப்படும் என்றும், அந்த விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் வகையில் வரும் 25-ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுவதாகவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.