கோவை ஜிடி அருங்காட்சியகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள PERFORMANCE CAR பிரிவை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.
கோவையில் உள்ள ஜி.டி. கார் அருங்காட்சியகத்தில் PERFORMANCE CAR பிரிவு புதிதாக தொடங்கப்பட்டது. பிரத்யேகமான கார்கள் அடங்கிய இந்த பிரிவை, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்து பார்வையிட்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், ஜி.டி.நாயுடு-வின் கண்டுபிடிப்புகள் பற்றி தனது பெற்றோர் கூறியதை நினைவு கூர்ந்தார். அதைத்தொடர்ந்து விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களில் ஒன்றாக ஜிடி அருங்காட்சியகம் அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.