தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்வதால் செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு மக்கள் சென்று வருகின்றனர்.
இதன் காரணமாக சென்னையை அடுத்துள்ள சிங்கப்பெருமாள் கோவில், பரனூர் சுங்கச்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னையிலிருந்து அதிகளவிலான வாகனங்கள் தென் மாவட்டங்களை நோக்கி செல்வதால் உப்புத்துறை, படாளம் ஆகிய பகுதிகளில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையிலும் கட்டுக்கடங்காத வாகன நெரிசல் ஏற்பட்டதால் உள்ளூர் வாசிகளும், அவசர தேவைகளுக்கு செல்பவர்களும் கடும் அவதி அடைந்தனர்.