கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தவெக தலைவர் விஜய் அறிவித்த 20 லட்ச ரூபாய் இழப்பீட்டு தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
கரூர், வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தவெக சார்பில் தலா 20 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார்.
அதன்படி உயிரிழந்த 41 பேரில், 39 பேரது குடும்பத்தினரின் வங்கி கணக்கில் நிவாரண தொகை வரவு வைக்கப்பட்டது. எஞ்சிய 2 பேரின் குடும்பத்தினரில், யாருக்கு நிவாரண தொகை வழங்குவது என்ற சிக்கல் நீடிப்பதால், நிதி வழங்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.