அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எதிராக அந்நாட்டு வீதிகளில் இறங்கி 70 லட்சத்துக்கு அதிகமான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டிரம்ப்பின் குடியேற்றக் கொள்கைகள், அரசுத் துறை பணிநீக்கங்கள், பொருளாதார கொள்கைகள் உள்ளிட்டவை அமெரிக்காவில் அதிருப்தி அலையை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் பல இடது சாரி சார்பு அமைப்புகளின் கூட்டணியான நோ கிங்ஸ் அமைப்பு, டிரம்ப் நிர்வாகம் சர்வாதிகார போக்குடன் செயல்படுவதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்கா முழுவதும் உள்ள 2,700 நகரங்களில் 70 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று டிரம்புக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். டிரம்ப் தனது புதிய பொருளாதார கொள்கைகளால் நாட்டைச் சிதைத்து வருவதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர்.
அமெரிக்க அரசின் தவறான குடியேற்றம் மற்றும் வெளியுறவுக் கொள்கைகளே டிரம்புக்கு எதிரான ஆயுதமாக மாறியுள்ளதால் செய்வதறியாது அவரது நிர்வாகம் தவித்து வருகிறது.