இந்தியாவின் பெண் அயன்மேன் பட்டத்தை வென்று ஐஐடி மெட்ராஸ் மாணவி சாதனை படைத்துள்ளார்.
சென்னை ஐஐடியில் படித்து வரும் ரெனீ நோரோன்ஹா, தனது 19 வயதில் இந்தியாவின் பெண் அயன்மேன் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
இந்தச் சாதனையைச் சாதாரணமாக நிகழ்த்தவில்லை. தனது 6 வயதில் ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் ஆர்வம் காட்டிய ரெனீ, 16-வது வயதில் கோவாவில் நடைபெற்ற “அயன்மேன் கிட்ஸ்” போட்டியில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், இந்தியாவின் இளம் பெண் அயன்மேன் பட்டத்தை வெல்ல நினைத்த அவர், அதற்காக இடைவிடாது பயிற்சிகளை மேற்கொண்டார்.
அந்தப் பயிற்சியின் பலனாக, 3.8 கிலோ மீட்டர் நீச்சல் அடித்தும், 180 கிலோ மீட்டர் சைக்கிளிங் செய்தும் மற்றும் 42 கிலோ மீட்டர் தூர மாராத்தான் ஓட்டப் பந்தயத்திலும் பங்கேற்று ஓடினர்.
இவையனைத்தும் 14 மணி நேரத்தில் செய்து முடித்துப் புதிய வரலாற்று சாதனை படைத்து இந்தியாவின் இளம் பெண் அயன்மேன் என்ற பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.