படுக்கை வசதிக்கொண்ட வந்தே பாரத் ரயிலில் பயணிகள் ஆடம்பர சொகுசு பயணம் மேற்கொள்ளும் வகையில் அதிநவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நவீன வசதிக்கொண்ட வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், இந்திய ரயில்வேயின் அடுத்தகட்ட முயற்சியாக “படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்” விரைவில் பயணிகளுக்காக இயக்கப்படவுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் உள்ள பிஇஎம்எல் (BEML) நிறுவனத்தில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை இரண்டிற்கும் மேற்பட்ட படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் தயாராகி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
16 ஏசி பெட்டிகளைக் கொண்ட இவ்வண்டியில், ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற அலங்காரங்களுடன் சிறப்பு உள்தள வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளதுடன், பயணிகளின் இரவு பயண அனுபவத்தை மேம்படுத்தும் வசதிகளும் இணைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக நவீன படுக்கைகள், பிரீமியம் ஃபர்ஸ்ட் கிளாஸ் கேபின்கள், எல்இடி டிவி, வாசிப்புக்கான விளக்குகள் மற்றும் நவீன சார்ஜிங் பாயிண்ட்கள், வைஃபை, தானியங்கி கதவுகள் மற்றும் விமானத்தைப் போல் உள் தளம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.