கோவையில் உள்ள கார்களுக்கான ஜி.டி.அருங்காட்சியகத்தில் சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சம் என்ன? இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
கோவை அவிநாசி சாலையில் உள்ள அண்ணா சிலை சந்திப்பு அருகே அமைந்துள்ளது ஜி.டி.அருங்காட்சியகம். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பழங்கால கார்களும், வெளிநாட்டு கார் வகைகளும் இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த அருங்காட்சியகம் 2015ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்திய ஆட்டோமொபைல் துறையின் சாதனைகளையும், வளர்ச்சியையும் விளக்கும் வகையில், தற்போது சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
வெவ்வேறு காலகட்டங்களில் உருவாக்கப்பட்ட கார் வகைகள் இந்தச் சிறப்பு பிரிவில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மோட்டார் வாகனங்களின் வரலாற்றை இளைஞர்கள் தெரிந்துகொள்ளவும், அதன் மூலம் ஆட்டோமொபைல் துறையில் அவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜிடி நாயுடுவின் மகன் ஜிடி கோபால் தெரிவித்துள்ளார்.
லம்போர்கினி, ஃபெராரி, Maserati, மெக்லாரன் அஸ்டன் மார்டின், மாஸ்டா, Porsche, Rolls Royce Spectre போன்ற விலை உயர்ந்த கார்கள்இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனன.
கோவையை சேர்ந்த கார் பந்தய வீரரான கரிவரதன் உருவாக்கிய கார்களும் இங்கு இடம்பெற்றுள்ளன. இந்திய ஆட்டோமொபைல் துறையின் பரிணாமத்தையும், வளர்ச்சியையும், கார்களை தயாரிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்தும் மக்கள் அறிந்துகொள்ள இந்தசிறப்புப் பிரிவு வழிவகுக்கும்எனத் தெரிவிக்கிறார், ஜிடி நாயுடுவின் பேரனான ஜிடி ராஜ்குமார்.
திங்கள்கிழமை நீங்கலாக வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 6.30 மணி இந்த அருங்காட்சியகத்தை மக்கள் பார்வையிட முடியும். கார்பிரியர்களைப் பிரம்மிக்கக வைக்கும் வகையில் அமைந்துள்ள இந்தசிறப்புப் பிரிவு, ஆட்டோ மொபைல் துறை நோக்கி மேலும் பல இளைஞர்களை இழுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.