முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் நிறுவனம் 50 கோடி சந்தாதாரர்களைத் தாண்டிச் சாதனை படைத்துள்ளது.
செப்டம்பர் 30, 2025 உடன் முடிவடைந்த காலாண்டில், அந்நிறுவனம் 83 லட்சம் புதிய மொபைல் பயனர்களைச் சேர்த்தது.
இதன் மூலம் அதன் மொத்த எண்ணிக்கை 50 கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது. ஜியோ பிளாட்ஃபார்ம்களின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 12.8% அதிகரித்து 7 ஆயிரத்து 379 கோடியாக உள்ளது என்றும், செப்டம்பர் வரையிலான 2-வது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் 42 ஆயிரத்து 652 கோடியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.