கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் கட்டுப்பாட்டை இழந்த கார் 15 அடி ஆழமுள்ள ஓடையில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
பத்தனம்திட்டா மாவட்டம் எருமேலியில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று தடுப்பு சுவரை இடித்து 15 அடி ஆழமுள்ள ஓடையில் பாய்ந்தது.
தொடர்ந்து ஓடையில் விழுந்த காரில் சிக்கி இருந்தவர்களை அக்கம்பக்கத்தினர் பத்திரமாக மீட்டனர். முன்னதாக அப்பகுதியில் நடந்து சென்ற பெண் நூலிழையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.