சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு இந்தியில் தீபாவளி வாழ்த்து தெரிவித்த காட்சிகள் வைரலாகி வருகிறது.
சென்னை ராஜா அண்ணாமலை மன்ற வளாகத்தில் திமுக சார்பில் தீபாவளி நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் வட மாநில மக்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து அவர்களை கவரும் விதமாக அமைச்சர் சேகர்பாபு தீபாவளி பரிசு பொருட்களை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தி கற்பதை வேண்டாமென சொல்ல மாட்டோம் எனக் கூறினார். தொடர்ந்து வடமாநில மக்களுக்கு அமைச்சர் சேகர்பாபு இந்தியில் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.