தேசம் முழுவதும் அனைத்து மக்களாலும் கொண்டாடப்படுகின்ற தீப ஒளித் திருநாளான தீபாவளிப் பண்டிகை நல்வாழ்த்துகளை நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
பகவான் ஶ்ரீ கிருஷ்ணபிரான் நரகாசுரனை வீழ்த்தி தர்மத்தை நிலைநாட்டிய இத்தினத்தில், அனைவரது வாழ்விலும் துன்பம் அகன்று இன்பமான சூழல் ஒளி பெறட்டும்.
நல்ல ஆரோக்கியத்துடன், எல்லா வளமும் மகிழ்வும் பெற்று நலமுடன் வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்வதோடு, பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடித்து கொண்டாட அனைவரையும் அன்புடன் வேண்டுகிறேன் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே குடியரசு துணைத்தலைவர் சிபி.ராதாகிருண்னனை எல்.முருகன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.