இந்தியப் பொருட்களை வாங்கி, சுதேசி என்று பெருமையுடன் சொல்லுங்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகைக்கு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்,தீபத் திருநாள் அனைவரின் வாழ்க்கையையும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்லிணக்கத்தால் ஒளிரச் செய்யட்டும் என தெரிவித்துள்ளார்.
சுயசார்பு உற்பத்தியை கொண்டாடுங்கள், 140 கோடி இந்தியர்களின் கடின உழைப்பை கொண்டாடுவோம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தீபாவளி நாளில் இந்தியப் பொருட்களை வாங்குவதை உறுதி செய்யுங்கள், மற்றவர்களும் உள்நாட்டு பொருட்களை வாங்க ஊக்குவியுங்கள் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
சிறு வணிகங்களை மேம்படுத்தவும், இந்தியாவின் பொருளாதார தன்னிறைவை வலுப்படுத்தவும் உள்நாட்டு பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் இந்தியப் பொருட்களை வாங்கி, சுதேசி என்று பெருமையுடன் சொல்லுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.