சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்து காவலரை தாக்கிய சம்பவத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜ்குமார் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணாசாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்திற்கு எதிரே சாலையோரத்தில் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜ்குமார் தனது காரை நிறுத்தி சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த போக்குவரத்து காவலர் வாகனத்திற்கு பூட்டு போட்டு அபராத ரசீது ஓட்டியுள்ளார்.
இதனால் எம்.எல்.ஏ ராஜ்குமாரின் ஆதரவாளர்கள் மற்றும் காவலரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து எம்.எல்.ஏ, ராஜ்குமார் காவலரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து காவலர் அளித்த புகாரின் பேரில் எம்எல்ஏ ராஜ்குமார் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அண்ணாசாலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்