தீபாவளி பண்டிகையை தமிழகம் பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திகாலையிலேயே தீபாவளி களைகட்டத் தொடங்கியுள்ளது. அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்த மக்கள் கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.
பழனி திருசெந்துஹர்ர முருகன் கோயில், மதுரை மீனாட்சியம்மன், தஞ்சை பெரிய கோயில், புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனம். மேலும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயிலிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடுகின்றனர். இதேபோல் உலகம் முழுவதிலும் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரும் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்கின்றனர்.