ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்குவதை நிறுத்தாவிட்டால், இந்தியா மீது கடுமையான வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவுக்கு உதவி செய்வதாக டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனால் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது கூடுதல் வரிவிதிகளை விதித்து வருகிறார். அந்த வகையில், இந்தியா மீது 50 சதவீத கூடுதல் வரியை ஏற்கனவே விதித்தார்.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த உள்ளதாக பிரதமர் மோடி உறுதி அளித்ததாக டிரம்ப் கூறி இருந்தார்.
அதற்கு மாறாக ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது தொடர்ந்தால் இந்தியா மீது கடுமையான வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.