சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை வீட்டுக்கு அனுப்பி தமிழக மக்களுக்கு வெளிச்சம் கொடுப்போம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க உள்ளூர் பொருட்களை மக்கள் வாங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தான் அணிந்தள்ள புதிய ஆடை காதியில் வாங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
கரூரில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க விஜய்க்கு காவல்துறை அனுமதி அளித்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகைக்கு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவிக்காதது ஏன்? என்றும், தமிழக மக்கள் திமுக எனும் அரக்கனை வீட்டுக்கு அனுப்புவார்கள் என்றும் எல்.முருகன் குறிப்பிட்டார்.