காவலர்கள் வீரவணக்க தினத்தை ஒட்டி டெல்லியில் உள்ள காவலர்கள் நினைவிடத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் மரியாதை செலுத்தினார்.
1959ம் ஆண்டு லடாக் பகுதியில் நடைபெற்ற சீனப்படை தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் வீர மரணமடைந்தனர்.
அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21ம் தேதி காவலர்கள் வீரவணக்க தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள தேசிய காவலர்கள் நினைவிடத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஏற்றுக்கொண்டார்.