மேற்குவங்கத்தில் எல்லை பாதுகாப்பு படையினர் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியது. அந்த வகையில் இந்திய, வங்கதேச எல்லை பகுதியான மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரியில் எல்லை பாதுகாப்பு படையினர் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
எல்லை பகுதியில் தீபம் ஏற்றிப் பாதுகாப்பு படையினர் உற்சாகமடைந்தனர். தொடர்ந்து பட்டாசு வெடித்தும், ஒருவருக்கொருவர் இனிப்புகளைப் பரிமாறியும் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.