நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
டெல்லியில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு பசுமைப் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் இரவு முழுவதும் பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.
ஜம்மு-காஷ்மீரின் பதேர்வா பகுதியில் CRPF வீரர்கள் பட்டாசு வெடித்தும் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்தும் பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.