தீபாவளி பண்டிகையை ஒட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி கடிதம் வெளியிட்டுள்ளார்.
அந்தக் கடிதத்தில், நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் கடவுள் ஸ்ரீராமர் வாழ்வதற்கான பாதையை மட்டும் அல்ல அநீதிக்கு எதிராகப் போராடவும் நமக்குக் கற்றுக்கொடுத்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், நக்சல் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டதால் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் முதல் முறையாகத் தீபாவளி கொண்டாடப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா வளர்ந்த நாடாக வேண்டும் என்றால் மக்கள் உள்நாட்டு தயாரிப்புகளை வாங்க வேண்டும் என வலியுறுத்திய பிரதமர், 3வது பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்துள்ளதாகவும், மேன்மேலும் வளர வேண்டும் என்றால் அனைத்து மொழிகளையும் இந்தியர்கள் மதிக்க வேண்டும் எனவும் கடிதத்தில் கூறியுள்ளார்.
இந்தியர்கள் ஒவ்வொருவரும் தங்கள் உடல்நிலை குறித்து கவனம் செலுத்த எண்ணெய் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி தனது வாழ்த்து கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.