தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் பருவமழை துவங்கியுள்ள நிலையில் தூத்துக்குடியில் கடந்த 5 தினங்களாகப் பெய்து வரும் கனமழையில் தருவை விளையாட்டு மைதானம் வெள்ள நீரில் மூழ்கிக் குளம் போல் காட்சி அளித்தது.
மேலும் அங்குப் பாசி படர்ந்த நிலையில் காணப்படுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதனால் 5வது நாளாக மக்கள் நடைபயிற்சிக்கு மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது.