கர்நாடகா மாநிலம் சிக்மகளூரில் மலை உச்சியில் அமைந்துள்ள தேவிரம்மா கோயிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சிக்மகளூர் மாவட்டத்தின் சந்திர துரோண மலைத் தொடரில் புகழ்பெற்ற தேவிரம்மா கோயில் அமைந்துள்ளது.
3 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள இந்தக் கோயில் நரக சதுர்த்தசி அன்று ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நரக சதுர்த்தசியை ஒட்டிக் கோயில் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
அதன்படி தேவிரம்மாவை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் கோயிலை நோக்கிப் பயணித்தனர். தொடர்ந்து மலை உச்சியில் உள்ள தேவிரம்மாவை பக்தர்கள் மனமுருகி வழிபட்டனர்.