நேபாளத்தில் நாய்களுக்கு மரியாதை செலுத்தும் குகுர் டிஹார் பண்டிகையையொட்டி ராணுவத்தில் பணிபுரியும் நாய்கள் கௌரவிக்கப்பட்டன.
டிஹார் என்பது நேபாளத்தில் 5 நாட்கள் கொண்டாடப்படும் தீப ஒளி திருநாள் ஆகும். விழாவின் இரண்டாவது நாளில் நாய்களுக்கு மரியாதை செலுத்தப்படுகின்றன.
அந்த வகையில் தெருநாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு மக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.
மேலும் இந்நாளில் நாய்களுக்குப் பிடித்த முட்டை, இறைச்சி போன்ற உணவுகளையும் அவைகளுக்கு கொடுத்து மக்கள் வணங்கி மகிழ்ந்தனர்.
அதேபோல் ராணுவத்தில் பணியாற்றும் நாய்களும் கௌரவிக்கப்பட்டன. வீரர்கள் அவைகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.