கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, பெண்கள், குழந்தைகள் உட்பட 11 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மங்களூர் மாவட்டத்தில் உள்ள புத்தூர் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் முதலமைச்சர் சித்தராமையா பங்கேற்று உரையாற்றிய நிலையில், திரளான மக்கள் அப்பகுதியில் குவிந்திருந்தனர். இதற்கிடையே தண்ணீர் பற்றாக்குறையால் பலர் சோர்வடைந்த நிலையில், அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலால் மூச்சு விட முடியாமல் பலர் மயக்கமடைந்ததால் நிலைமை மோசமடைந்தது.
இந்நிலையில், உடல்நிலை பாதுக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.