ஈரோட்டில் தீபாவளிக்கு மறுநாள் துணி வகைகள் தள்ளுபடி விலையில் விற்கப்பட்டதால் அதிகாலை முதலே பொதுமக்கள் குவிந்தனர்.
நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்ட ஒரு நிலையில் தீபாவளிக்கு மறுநாள் ஈரோடு உள்ள ஜவுளிக்கடைகளில் தள்ளுபடி விலையில் உடைகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.
இந்தத் துணிகளை வாங்குவதற்காக ஈரோடு மட்டுமன்றி சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர்.
அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு பல வகையான துணிகளை வாங்கி சென்றனர். மேலும் சில கடைகள் ஆன்லைன் பரிவர்த்தனை கிடையாது என்றும், வாங்கப்படும் துணிகளுக்கு எக்சேஞ்ச் கிடையாது என்றும் அறிவித்திருந்தபோதும் விற்பனை பாதிக்கப்படவில்லை.