தஞ்சையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தும், நீர்நிலைகள் நிரம்பியும் காணப்பட்டன.
அதன் ஒரு பகுதியாகத் தஞ்சையில் பரவலாக மழை பெய்தது. இதனால் நல்ல வன்னியன் குடிகாடு என்ற பகுதியில் பயிரிடப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்தன.
ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாக் தெரிவித்த விவசாயிகள் சேதமான பயிர்களை கணக்கிட்டு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை வைத்தனர்.