திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா தொடங்க உள்ள நிலையில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா மிகப் பிரம்மாண்டமாகக் கொண்டாடுவது வழக்கம், அந்த வகையில் இந்த ஆண்டிற்கான விழா நாளை யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது.
இதன் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளதால், அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
யாகசாலை மண்டபம், கடற்கரை உள்ளிட்ட இடங்களில் தடுப்பு வேலிகள், சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சஷ்டி விழா நாளைத் தொடங்க உள்ள நிலையில் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வரத்தொடங்கியுள்ளனர்.