காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் பகுதியில் உள்ள கிருஷ்ணா நதிநீர் கால்வாயில், தனியார் மருத்துவமனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் கலப்பதால், செம்பரம்பாக்கம் ஏரி நீர் மாசடையும் அபாயம் உருவாகியுள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.