எல்லையில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் ஊடுருவக் காத்திருப்பதையடுத்து இந்திய ராணுவம் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
கடந்த ஏப்ரலில் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் அதிரடி தாக்குதல் நடத்தியது.
இதில் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. இதற்குப் பின்னரும் திருந்தாத பாகிஸ்தான், இந்தியாவுக்குள் ஊடுருவக் காஷ்மீர் எல்லை அருகே 120 பயங்கரவாதிகளைக் கொண்டுவந்து நிறுத்தி இருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகளை இந்திய ராணுவத்தினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.