உத்தரப்பிரதேச மாநிலம், பதேஹாபாத்தில் தீபாவளி போனஸ் வழங்காததை கண்டித்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் சுங்கக் கட்டணம் செலுத்தாமல் செல்ல அனுமதிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
பதேஹாபாத்தில் இயங்கி வரும் சுங்கச்சாவடியில் பணியாற்றும் ஊழியர்கள் குறிப்பிட்ட தொகையைத் தீபாவளி போனஸாக வழங்க வலியுறுத்தினர்.
இந்நிலையில் அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் ஆத்திரமடைந்த ஊழியர்கள், ஆயிரக்கணக்கான வாகனங்களைக் கட்டணம் செலுத்தாமலே சுங்கச்சாவடியை கடக்க அனுமதித்தனர்.
இதனால் அதிர்ந்து போன சுங்கச்சாவடி நிர்வாகம் உடனடி தீர்வாக 10 சதவீத சம்பள உயர்வை உறுதியளித்தது.
இதனைத் தொடர்ந்து இரண்டு மணி நேர இடையூறுக்குப் பிறகு ஊழியர்கள் மீண்டும் பணியைத் தொடங்கினர்.