மதுரையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாகச் செல்லூர் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகினர்.
மதுரை மாநகர் பகுதியில் எட்டு மணி நேரத்திற்கு மேலாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தல்லாகுளம் சாலை, தமுக்கம் சாலை, நரிமேடு மற்றும் செல்லூர் ஆகிய பகுதிகளில் சாலைகள் முழுவதிலும் மழைநீர் தேங்கியுள்ளது.
இதனால் வாகனங்கள் நீரில் மூழ்கிச் செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. செல்லூர் வார்டு பகுதிக்கு உட்பட் இந்திரா நகரில் கனமழை காரணமாகக் கழிவு நீரோடு மழைநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் குடியிருப்பு வாசிகள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகி உள்ளனர்.
இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் என அனைவரும் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
நோய் தொற்று ஏற்படும் நிலையும் ஆபத்தான முறையில் மழை நீரில் செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டிருப்பதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.