முதல்வர் ஸ்டாலின் சத்தமே இல்லாமல் சாராய விற்பனையில் கல்லா கட்டுக்கிறார் - நயினார் நாகேந்திரன்
Oct 22, 2025, 06:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முதல்வர் ஸ்டாலின் சத்தமே இல்லாமல் சாராய விற்பனையில் கல்லா கட்டுக்கிறார் – நயினார் நாகேந்திரன்

Web Desk by Web Desk
Oct 22, 2025, 04:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதல்வர் ஸ்டாலின் சத்தமே இல்லாமல் சாராய விற்பனையில் கல்லா கட்டிக் கொண்டிருந்திருக்கிறார் என்பது வெட்கக்கேடானது என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தீபாவளிப் பண்டிகையையொட்டி தமிழகத்தில் சுமார் 789 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மது விற்பனை நடந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள், இந்த டாஸ்மாக் மாடல் அரசின் கோர முகத்தை நமக்குத் தோலுரித்துக் காட்டுகின்றன.

சாதாரண நாட்களிலேயே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் தமிழகத்தில், பண்டிகை நேரத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடுமோ, மக்களின் மகிழ்ச்சியும் நிம்மதியும் குலைந்துவிடுமோ என நாம் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு கடவுளிடம் பிரார்த்தித்துக் கொண்டிருக்கையில், சம்பந்தப்பட்ட  திமுக அரசும் அதை இயக்கும் முதல்வர்  ஸ்டாலின் அவர்களும் சத்தமே இல்லாமல் சாராய விற்பனையில் கல்லா கட்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்பது வெட்கக்கேடானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுவும் வடகிழக்குப் பருவமழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கடந்த நான்காண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மது விற்பனை உச்சம் பெற்றுள்ளது என்றால், அரசு இயந்திரத்தின் மொத்த வளங்களையும் கவனத்தையும் சாராய விற்பனையில் தான் திமுக செலவழித்துள்ளது என்பது தானே அர்த்தம்? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

மழை வெள்ளத்தால் ஆங்காங்கே சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது, விழுப்புரம்-கடலூர் மாவட்டங்களில் வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது, தேனியில் வெள்ளம் பாதித்த பகுதிகள் மீண்டபாடில்லை, அத்தியாவசியப் பொருட்களுக்கு சில இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, 90% மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துவிட்டதாகக் கூறிய சென்னை மாநகரம் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது.

முறையான சேமிப்புக் கிடங்குகள் இல்லாததால் விளைவித்த பயிர்கள் மழையில் நனைந்து முளைப்பு கட்டிப் போயுள்ளது, டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கிருந்த பயிர்களும் சேதமாகியுள்ளது. ஆனால், டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் எவ்வித சேதமுமில்லாமல், மதுவை சிறிதும் தொய்வின்றி விற்பனை செய்துகொண்டிருக்கிறது திமுக அரசு. இதுதான் நாடு போற்றும் நல்லாட்சிக்கான இலக்கணமா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Tags: நயினார் நாகேந்திரன்மது விற்பனைமுதல்வர் ஸ்டாலின்Chief Minister Stalin has been quietly cracking down on liquor sales - Nainar Nagendranசாராய விற்பனை
ShareTweetSendShare
Previous Post

சபரிமலை ஐயப்பனை தரிசித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

Next Post

இந்தியா மீது உலக வர்த்தக அமைப்பில் சீனா புகார்!

Related News

ஒரு குறிப்பிட்ட தேதி ரத யாத்திரைக்கு சாத்தியமில்லை – இஸ்கான்

மதுரை மாநகராட்சி வரி வசூல் மையத்தின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விபத்து!

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு இது கண்ணீர் தீபாவளி  – எடப்பாடி பழனிசாமி

கடலூர் : 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!

குரூப் – 4 தேர்வு முடிவுகள் வெளியீடு!

வைகை ஆற்றில் அணு குண்டு ரக பட்டாசுகளை பெட்ரோல் ஊற்றி வெடித்த இளைஞர்கள்

Load More

அண்மைச் செய்திகள்

பீகார் தேர்தலில் பலவீனமாகும் மகா கூட்டணி – ஆர்.ஜே.டி. காங்., உறவில் விரிசல்!

தீபாவளி வாழ்த்து சொன்ன ட்ரம்ப் : பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் என மோடி பதில்!

மாறும் தெற்காசிய அரசியல் : புதிய பாதையில் பயணிக்கும் இந்தியா- ஆப்கனிஸ்தான்!

இந்தியர்களை அடிமைகளாக்கும் கஃபாலா : சவுதி அரேபியா ரத்து செய்தது ஏன்?

செயற்கை மழைக்கான நடவடிக்கைகள் தயார் – மஜிந்தர் சிங் சிர்சா

ரூ.846 கோடியாக அதிகரித்த சத்ய நாதெல்லாவின் வருமானம்!

அமெரிக்காவுடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகிறது : இந்தியா மீதான வரி 16 சதவீதமாக குறைய வாய்ப்பு!

இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் : எதிரிகள் இனி தப்ப முடியாது – வல்லுநர்கள் பெருமிதம்!

நீரஜ் சோப்ராவுக்கு கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவி!

லோகா படத்தை தெலுங்கில் தோல்வியடைய வைத்திருப்பார்கள் – நாக வம்சி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies