காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் தமிழக வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமானது.
பான் இந்தியா வெளியிடான இத்திரைப்படம் இதுவரை 770 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.
விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ள இந்தப் படம் தமிழகத்தில் 70 கோடி ரூபாயையும், கேரளாவில் 55 கோடி ரூபாயையும் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீபாவளியையொட்டி நிறைய திரையரங்குகளில் காந்தாரா சாப்டர் 1 ஓடுவதால் 850 கோடி ரூபாய் வரை வசூலிக்கும் எனக் கூறப்படுகிறது.
















