கேரளா வந்துள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் ஹெலிகாப்டர் சக்கரம், புதிதாக அமைக்கப்பட்ட கான்கிரீட் தளத்தில் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்யத் திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர் நிலக்கல் சென்றார்.
மோசமான வானிலை காரணமாக நிலக்கல் ஹெலிகாப்டர் தளத்தில் இறங்க வேண்டிய ஹெலிகாப்டர் பிரமாடம் என்ற இடத்தில் தற்காலிகமாகத் தயார் செய்த ஹெலிகாப்டர் தளத்தில் தரை இறக்கம் செய்யப்பட்டது.
அப்போது, ஹெலிகாப்டரின் டயர் கான்கிரீட்டில் சிக்கிகொண்டநிலையில், பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர், தீயணைப்புத் துறை வீரர்கள் ஹெலிகாப்டரைப் பத்திரமாக மீட்டனர்.