கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தொடர் மழை காரணமாக 500 ஏக்கருக்கும் மேல் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
புவனகிரி அருகே ஓடாக்கநல்லூர், வெள்ளியக்குடி, சக்தி விளாகம், சாத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் சம்பா நெல் நடவு செய்துள்ளனர்.
கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக, விளைநிலங்களில் மழை நீர் தேங்கி சுமார் 500 ஏக்கருக்கும் மேல் நெற்பயிர்கள் நீரில்மூழ்கிச் சேதமாகியுள்ளதுது.
இந்நிலையில், வடிகால் மற்றும் பாசன வாய்க்கால்களைமுறையாகத் தூர்வாரர வேண்டும் எனவும், பாதிக்கப்பட்பயிர்களுக்குரியய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.