டெல்டாவில் நெல் கொள்முதல் செய்யாததால் விவசாயிகளுக்கு நடப்பாண்டு கண்ணீர் தீபாவளியாக இருந்தது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தஞ்சையில் பேசியவர்,
டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு இது கண்ணீர் தீபாவளி என்றும் நெல் கொள்முதல் செய்யாமல் சுமார் 20 நாட்கள் காலதாமதம் செய்துள்ளனர் என்று அவர் குற்றம் சாட்டினார்.
நாளொன்றுக்கு 2000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவதாக அரசு தெரிவித்திருந்தது ஆனால் 900 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர் என்றும் திறந்த வெளியில் வைக்கப்பட்டுள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.