மதுரையில் மழை காரணமாக மாநகராட்சி வரி வசூல் மையத்தின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்ததால் அதிகாரிகள் அச்சமடைந்தனர்.
மதுரை பழங்காநத்தம் பகுதியில் மாநகராட்சியின் 71, 72, 74 ஆவது வார்டுகளுக்கான கணிணி வரிவசூல் மையம் மற்றும் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், பெய்த மழை காரணமாக மாநகராட்சி வரி வசூல் மையத்தின் மேற்கூரை பூச்சு அடுத்தடுத்து பெயர்ந்து விழுந்தது.
அப்போது பணியில் இருந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் நல்வாய்ப்பாகக் காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினர்.
பழமையான கட்டடங்களை இடிப்பதற்கு மாநகராட்சி மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில், மாநகராட்சி அலுவலக கட்டடங்களே பழமையான கட்டிடங்களாகச் செயல்பட்டு வருவதால் இது போன்ற விபத்து நிகழ்வதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.