லோகா படத்தைத் தெலுங்கில் எடுத்திருந்தால் தோல்வியடைய வைத்திருப்பார்கள் எனச் சினிமா தயாரிப்பாளர் நாக வம்சி தெரிவித்துள்ளார்.
ரவி தேஜா நடித்துள்ள மாஸ் ஜாதரா படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், லோகா தெலுங்கில் எடுக்கப்பட்டிருந்தால் மக்கள் பல குறைகளைச் சொல்லி இருப்பார்கள் எனவும், நிச்சயமாகப் படத்தைத் தோல்வியடைய செய்திருப்பார்கள் எனவும் கூறினார். நாக வம்சியின் இந்தப் பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.