ஈட்டி எறிதல் போட்டியில் அதிக தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்த நீரஜ் சோப்ராவுக்கு இந்திய ராணுவத்தில் கவுரவ பதவி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா ஜூனியர் ஜூனியர் கமிஷன்ட் அதிகாரியாக இந்திய ராணுவத்தில் சேர்ந்தார்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள சவுத் பிளாக்கில் நடந்த விழாவில், நீரஜ் சோப்ராவுக்கு, இந்திய ராணுவத்தின் கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டது.
இந்த விழாவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர திவேதி கலந்து கொண்டனர்.
முன்னதாக, நீரஜ் சோப்ராவுக்கு பத்மஸ்ரீ, மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது, பரம் விஷிஷ்ட் சேவா பதக்கம் மற்றும் விஷிஷ்ட் சேவா பதக்கம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.